Header Top Ad
Header Top Ad

மருத்துவ முகாம் நடத்த கோவை மாநகராட்சி அனுமதி வழங்குவதில்லை- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு…

கோவை: கோவையில் நலம் மருத்துவமுகாம் நடத்துவதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்குவதில்லை என வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை செட்டிவீதி பகுதியில் நலம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சேவை இருவாரம் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி நலம் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. மருத்துவ முகாம் இதற்கு முன்பு நடைபெறும் பொழுது அருகில் இருக்கக்கூடிய மாநகராட்சி பள்ளிக்கூடங்கள் சமூக நலக்கூடங்களில் நடைபெறும் என்றும் ஆனால் இரண்டு மாதங்களாக மாநகராட்சி அனுமதி அளிக்க மறுப்பதாகவும் காலதாமதம் செய்கிறார்கள் அதனால் தனியார் மண்டபங்களில் வாடகைக்கு எடுத்து இந்த முகாம்களை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அரசாங்கமே மருத்துவ முகாம் நடத்துவதால் உங்களுக்கு கொடுக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவிப்பதாகவும், உங்களது மருத்துவ முகாம் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் பலன் பெற்று வருகிறார்கள் என தெரிவித்தார். தேர்தல் வருகின்ற காரணத்தால் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை முடக்க வேண்டும் என்பதற்காகவே நாங்க்ள் நடத்தும் மக்கள் நல திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார். முதலமைச்சர் துணை முதலமைச்சர் புகைப்படங்கள் மட்டும்தான் மக்களுக்கு தெரியவேண்டும் என்று நினைத்தால் அந்தப் புகைப்படத்தை மறைப்பதற்கு தேர்தல் வருகிறது என்றார்.

Advertisement

எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யும் மக்கள் நல பணிகளுக்கு அனுமதி மறுப்பது மக்களுக்கு செய்கின்ற துரோகம் என்றார். மரம் நடும் விழாவில் கூட எம்பி மேயர் ஆகியோர் வைப்பதை எல்லாம் அதிகாரப்பூர்வமாக கணக்கில் கொள்கிறார்கள் என்றார். 10 எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஜெயித்து விட்டதால் எந்த ஒத்துழைப்பும் கொடுக்காமல் நான்குரை வருடங்களாக நெருக்கடிகளை கொடுத்து வருவதாகவும் மீண்டும் கோவையில் பத்துக்கு பத்து தேசிய ஜனநாயக கூட்டணி தான் என தெரிவித்தார்.

அனைவருக்கும் சுத்தமான குடிநீர் திட்டம் குறித்தான கேள்விக்கு, கோவையில் அதிக நேரங்களில் குடிநீர் பற்றாக்குறை வருவதாகவும் அதற்கு சிறுவாணி அணையில் தண்ணீர் இல்லை என்ற காரணம் கூறுவதாகவும் கூறிய அவர் இது குறித்து கேரளா அரசிடம் பேசுவதற்கு ஏன் தயங்குகிறார்கள் என கேள்வி எழுப்பினார். ஏன் சிறுவாணி அணையை புறக்கணிக்கிறீர்கள்? என்றார். தொலைநோக்கு பார்வையோடு தீர்வு தருவது என்பது திமுக அரசிற்கு கிடையாது என்றார்.

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை யாரு திமுகவை வீட்டு அனுப்ப் வேண்டும் என்பதுதான் ஒற்றைக் குறிக்கோள். யாரெல்லாம் திமுகவிற்கு எதிராக உள்ளார்களோ அனைவரும் ஒரே அணியில் சேர வேண்டும் என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணியில் எண்ணம் என தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு பெற்றதன் பிறகு விதிமுறையின் படி கட்சிகளை நடத்தவில்லை என்றால் கட்சிகளின் அங்கீகாரங்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்து விடும் என தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பற்றி பேசிய அவர், ரசிக தன்மைக்காக சமூகத்தின் கொண்டு ரசிகர்களை தொண்டர்களாக மாற்றாவிட்டால் எந்தபலனும் கிடைக்கப் போவதில்லை என தெரிவித்தார். விஜய் பேசுகின்ற பொழுது ஒரு விஷயத்தை முழுமையாக படித்து தெரிந்து பேச வேண்டும் என்றும் அவர் மீனவர் பிரச்சனை குறித்து பேசும் பொழுது 2011ல் போராடிய பொழுது காங்கிரஸ் ஆட்சி இருந்தது, 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீனவர்களுக்காக போராடுகின்ற சூழல் வந்ததா என கேள்வி எழுப்பினார். அப்படி இருக்கும் பொழுது பாசிசம் பாஜக என்று பேசக்கூடிய வசனங்கள் எல்லாம் நன்றாக தான் உள்ளது உண்மையிலிருந்து நீண்ட தூரம் தள்ளி இருக்கிறது என்று கூறினால் அதற்கு வேல்யூ வராது என தெரிவித்தார்.

திமுக தனியாக நின்றால் எட்டு சதவிகிதம் வாக்குகள் தான் கிடைக்கும் என்று செல்லூர் ராஜு கூறியது தொடர்பான கேள்விக்கு, எவ்வளவு பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும் கூட்டணி என்பது தேவைப்படும் என்றும் அது எவ்வாறு சரியாக எடுத்துச் செல்கிறார்கள் அது எல்லாம் தான் அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணம் என தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வெட்கிரைண்டர் பிரச்சனைகள் குறித்து பேசி இருப்பதாகவும் இன்னும் பல்வேறு பிரச்சனைகளை மனுவாக அளிக்கும்படி கூறியுள்ளார் என்றும் தெரிவித்தார்.

அண்ணாமலையை பாஜக தவிர்த்து வருகிறது என்று பரவலாக பேசப்பட்டு வரும் கருத்து தொடர்பான கேள்விக்கு, எங்களை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தலைவர்களுக்கு அழைப்புகள் விடுகிறோம் என்றும் அவர் உடல்நிலை சரியில்லாமல் சிறிது நாட்கள் இருந்தார், நேற்றைய நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக தான் சொன்னார்கள் என பதில் அளித்தார்.

வாக்காளர் பட்டியலில் பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியினர் முன்வைத்து வருவது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கும் என்றும், என்னுடைய தொகுதியில் கூட 25 சதவிகிதம் வாக்காளர்கள் இல்லை என தெரிவித்த அவர் இதனை சரி செய்வதற்காக தேர்தல் கமிஷன் ஒரு முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஆதாரம் இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முடியாது என்றும் அப்படியிருந்தால் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார். ராகுல் காந்திக்கு மோடியை பற்றி கையில் எடுக்க எந்த விஷயமும் இல்லை என்பதால் எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தார். ஆதாரம் இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் முறையிடட்டும் என்றும் தெரிவித்தார்.

பணம் கொடுப்பதும் பணம் பெறுவதும் என்பது தேர்தலில் சாதாரணமான நடைமுறையாக மாறி வருவது என்பது துரதிஷ்டவசமானது என்றும் பணம் கொடுப்பது பற்றி புகார் அளிக்க அழைத்து பேசும்பொழுது பணம் வாங்குபவர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்றால் எப்படி நடவடிக்கை எடுப்பது என்று கேள்வி கேட்கிறார்கள் என்றும் எனவே இரண்டு தரப்பு முயற்சி செய்ய வேண்டும் பணம் வாங்குகின்ற பிரச்சனை பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகின்ற பிரச்சனை இரண்டு தரப்பும் ஒன்று சேர்ந்தால் தான் நிறுத்த முடியும் என தெரிவித்தார்.

Recent News