கோவையில் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

கோவை: கோவையில் இந்த வாரம் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Advertisement

எதிர்வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பின்வருமாறு:

செப்டம்பர் 24, புதன்:

வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை – 32°C | குறைந்தபட்சம் – 22°C

செப்டம்பர் 25, வியாழன்:

வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை – 31°C | குறைந்தபட்சம் – 22°C

செப்டம்பர் 26, வெள்ளி:

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய மிதமானத் முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை – 31°C | குறைந்தபட்சம் – 22°C

செப்டம்பர் 27, சனி:

இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை – 31°C | குறைந்தபட்சம் – 22°C

செப்டம்பர் 28, ஞாயிறு:

வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை – 31°C | குறைந்தபட்சம் – 22°C

செப்டம்பர் 29, திங்கள்:

வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்பு.
அதிகபட்ச வெப்பநிலை – 32°C | குறைந்தபட்சம் – 22°C

வானிலை மையத்தின் கணிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டு இருக்கலாம். வானிலை மையம் தரும் புதிய அப்டேட்களை நமது செய்தித்தளத்தில் படிக்கலாம்.

Recent News

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2025 இறுதி சுற்று போட்டிகள் கோவையில் துவக்கம்…

கோவை: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2025 இறுதி சுற்று போட்டிகள் கோவையில் துவங்கியது. மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்-2025' இறுதிச்சுற்று போட்டிகள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை குனியமுத்தூரில்...

Video

Join WhatsApp