கோவை: கோவை மருதமலை முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.
கோவை, மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் முடித்து விட்டு வரும் போது பக்தர்கள் முந்தி அடித்துக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பல்வேறு திரை பிரபலங்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் பிரபல திரைப்பட காமொடி நடிகரான யோகி பாபு மருதமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பாலக்காட்டில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு முடிந்த நிலையில் அதில் நடித்து வரும் யோகி பாபு மருதமலைக்கு வந்து முருகனை தரிசனம் செய்தார்.
அப்போது சொந்தமாக தயாரிக்க இருக்கும் படத்தின் கதையை முருகன் பாதத்தில் வைத்து பெற்றுக் கொண்டார். யோகி பாபு கண்ட பக்தர்கள் முநிதி அடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டனர்.