கோவை: கோவையில் நாளை இரண்டு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்பராமரிப்பு பணிகளுக்காக கோவை மாவட்டத்தில் நாளை (செப்டம்பர் 26 ஆம் தேதி) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
ரேஸ் கோர்ஸ் துணை மின் நிலையம்:
தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ் கோர்ஸ், அவினாசி ரோடு (அண்ணா சிலை முதல் கலெக்டரேட் வரை), திருச்சி ரோடு (கண்ணன் டிபார்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை).
பதுவம்பள்ளி துணை மின் நிலையம்:
பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காகப்பாளையம், சோக்கம்பாளையம்.
குறிப்பு:
மேற்குறிப்பட்ட இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் விநியோகம் தடைபடலாம். அல்லது, குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.