கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு மாதங்களில் 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சில வாரங்களாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் பொழுது வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடனும் நவீன கருவிகளுடனும் சோதனையில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் வளாகத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய பொருட்கள் கண்காட்சி பகுதியும் முழுமையாக சோதனை செய்யப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் 7 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.