இது எங்க மேம்பாலம்… கோவை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர் காரசார வாக்குவாதம்!

கோவை: கோவை, அவினாசி சாலை மேம்பாலம் தொடர்பாக மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க கவுன்சிலர்கள் வாக்குவாதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்றது. அ.தி.மு.க, தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

Advertisement

அண்மையில் கோவை அவிநாசி சாலையில் ஜி.டி நாயுடு மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதிற்காக சிறப்பு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அப்போது, அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் இந்த திட்டத்தை கொண்டு வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Advertisement

அப்போது தி.மு.க மாமன்ற உறுப்பினர் ஒரு சேர ஒன்றிணைந்து அ.தி.மு.க மாமன்ற உறுப்பினர் பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடப்ட்டனர் . இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் எழுந்து உள்ளது .

பின்னர் சிறப்பு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வாழ்க என கோஷமிட்ட படியே அ.தி.மு.க உறுப்பினர்கள் பிரபாகரன் மற்றும் ரமேஷ் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரபாகரன், மேயர் பல்வேறு கட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய அவர் , 103 தீர்மானஙக்ளில் 55 தீர்மான்ங்களுக்கு முன் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் கையூட்டு நடைபெற்று இருக்க கூடும் எனவே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Recent News

18வது கோயம்புத்தூர் விழா நடைபெறும் தேதியும் முக்கிய நிகழ்வுகளும் அறிவிக்கப்பட்டன…

கோவை: கோயம்புத்தூர் விழாவின் 18வது பதிப்பு கோலாகலமாக துவக்கியது. கோவை மாநகர் ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும், மாநகராட்சி நிர்வாகமும் இணைந்து இந்த கோயம்புத்தூர்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp