கோவை: போத்தனூர் ரயில்நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்…
கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சி – மங்கலூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் பொதுப்பயணிகள் பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்துள்ளது.
அந்த பையை திறந்து சோதனை செய்தபோது, அதில் 5 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 2,50,000 என கூறப்படுகிறது.