கோவையில் வாகன சோதனையில் போலீஸ்காரர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்!

கோவை: கோவையில் வாகன தணிக்கையின் போது போலீஸ்காரர் மீது காரை மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் வசிப்பவர் பிரவீன் (வயது 26). ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில், போக்குவரத்து பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று உதவி ஆய்வாளர் பிரசாந்த் தலைமையிலான போலீசாருடன் இணைந்து தொண்டாமுத்தூர்- வடவள்ளி சாலையில் பிரவீன் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த காரை பிரவீன் தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால், காரை ஓட்டி வந்த நபர் நிறுத்தாமல் பிரவீன் மீது மோதிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றார்.

இந்த விபத்தில் பிரவீனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரை சக போலீசார் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து பிரவீன் வடவள்ளி போலீசில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிந்து விசாரித்து, காரை ஓட்டிச்சென்ற நபரைத் தேடி வருகின்றனர்.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp