கோவை: எலுமிச்சை பழம் சுத்தி போட்டதில் தகராறு ஏற்பட்டு இரு வீட்டார் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழம் சுற்றி திருஷ்டி கழித்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோதல் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை காரமடை அருகே உள்ள பெரிய புதூர் பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் புதிதாக ஒரு கார் வாங்கியுள்ளனர் காரின் பாதுகாப்பிற்காகவும் நல்ல நேரம் பார்த்து திருஷ்டி கழிக்கவும் முடிவு எடுத்த உரிமையாளர் காரின் சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்களை வைத்து திருஷ்டி சுற்றி போட்டு உள்ளார்.
திருஷ்டி சுற்றி போடப்பட்ட எலுமிச்சை பழங்கள் பக்கத்து வீட்டின் அருகே போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் எங்கள் வீட்டு முன் ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டு அது இரு குடும்பத்தினர் இடையே கடும் வாக்குவாதமாக மாறியது.
வார்த்தை போர் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்க தொடங்கினர். இதில் இருதரப்பிலும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தக் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது பெண்கள் உட்பட இரு தரப்பினர் ஒருவருக்கு ஒருவர் தள்ளுமுள்ளு செய்து தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் இருந்து காரமடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் பின்னர் இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ethu ellaru veetulayum nadakurathu thana