சென்னையில் மாபெரும் மாநாடு- கோவையில் நடந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் முடிவு…

கோவை: சென்னையில் மாபெரும் மாநாடு நடத்துவதற்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் நல சங்கம் திட்டமிட்டுள்ளதாக கோவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது…

தமிழ்நாடு மாற்று திறனாளி வழக்குரைஞர்கள் நல சங்கம் சார்பில் சென்னையில் மாநாடு நடத்துவதற்காக பல்வேறு மாவட்டங்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை காட்டூர் பகுதியில் உள்ள சிறப்பு குழந்தைகள் பள்ளியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர்ந் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்கான தேவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மாற்றுத்திறனாளி வழக்குரைஞர்கள் நீதிமன்றங்களில் சென்று பணியாற்றுவதற்கு தேவையான லிப்ட், சாய்தளம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகள் கழிவறைகள் குறித்தும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர்களுக்காக தனி சேம்பர்கள் வேண்டும் என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இது சம்பந்தமாக வருகின்ற ஜூலை 31ம் தேதிக்குள் சென்னையில் மாநாடு நடத்துவதற்கு இக்கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

Recent News

Video

Join WhatsApp