கவிப்பேரரசு வைரமுத்து மீது கோவையில் சிவனடியார்கள் திருகூட்டத்தினர் புகார்

கோவை: கடவுள் ராமரைப் பற்றி அவதூறு பேசியதாக கவிப்பேரரசு வைரமுத்து மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் கடந்த 8ம் தேதி நடைபெற்ற கம்பன் கழக பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து ராமர்(கடவுள்) பற்றி பேசும்பொழுது “சீதையை பிரிந்த ராமன் மதி மயங்கி புத்தி சுவாதீனம் இழந்துவிட்டான், வாலியை கொன்றதால் ராமன் பெரும் குற்றவாளி, குற்றவாளியை ராமாயணம் எழுதிய வால்மீகி உயர்த்தி பிடித்துள்ளார், கிருபானந்த வாரியாரும் ராமனை உயர்ந்தவர் என்று பல மேடைகளில் பேசியுள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில் வைரமுத்து பேசியது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ஸ்ரீ நாராயண ராமானுஜர் ஜீயர் சுவாமிகள் தலைமையில் ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் தலைவர் மாணிக்கவாசகம் உட்பட பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் புகார் அளித்தனர்.

Advertisement

யாராக இருந்தாலும் இன்னொருவர் மனம் புண்படும்படி பேசக்கூடாது எனவும் நல்ல விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group