கோவை: கோவை இருந்து கேரளா உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 25.50 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக – கேரளா எல்லையான வேலந்தாவளம் சோதனை சாவடி காவல் துறையின் சோதனை நடத்தி வந்தனர். அப்பொழுது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப் , பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் ஏற்பட்டு தீவிர சோதனை செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 25.50 லட்சம் இருந்தது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், மங்காடா பகுதியைச் சேர்ந்த முனீர் (வயது 40) என்பதும் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் கேரளா மாநிலம் பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த நிசார் (வயது 40) என்பவரிடம் இருந்து 200 கிராம் தங்கத்தை முனீரிடம் கொடுத்து உள்ளார்.
அதை கோவை உக்கடத்தில் விற்று, அந்தப் பணத்தைக் கேரளாவிற்குக் கொண்டு வருமாறு நிசார் கூறியதாக கூறியுள்ளார். அவரிடம் இருந்து ரூபாய் 25,50,000, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கோவையில் இருந்து கேரளாவுக்கு உரிய ஆவணங்கள் இன்று கொண்டு சென்ற ரூபாய் 25.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

