கோவையில் அரசு பேருந்து நடத்துனரிடம் சண்டையில் ஈடுபட்ட நபர்- வைரல் வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் போதையில் இருந்த நபர் அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவையில் மது போதையில் பேருந்தில்ல் ஏறிய நபர் ஒருவர் பேருந்து நிற்காத நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என வலியுறுத்தி நடத்துனரை தாக்கி உள்ளார்.

கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை சோமனூர் செல்லும் 90 என்ற எண் கொண்ட அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டு இருந்த போது பேருந்தில் ஒரு நபர் மதுபோதையில் ஏறி உள்ளார்.

பேருந்து லட்சுமி மில் சிக்னலை தாண்டி சென்ற போது அடுத்த நிறுத்தமான எஸ்.சோ பங்க் பகுதியில் பேருந்து நிறுத்தும்படி அந்த நபர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அந்தப் பேருந்து குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கும் சொகுசு பேருந்து என்பதால் அந்த இடத்தில் நிறுத்த முடியாது என நடத்துனர் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசிய ரகளையில் ஈடுபட்டார்.

ரகளை முற்றியதால், ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். அப்போது அந்த போதை நலர் பேருந்தில் இருந்து கீழே இறக்க முயன்ற போது அவர் நடத்துனரை தாக்கி கைகலப்பில் ஈடுபட்டார்.

பேருந்தில் நடந்த இந்த அத்துமீறல்கள் அங்கு இருந்த பயணி ஒருவர் அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். அதில் அந்த நபர் நடத்துனரை ஒருமையில் பேசுவதும், அவரை தாக்குவதும் தெளிவாக பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்- மிகப்பெரிய ப்ராஜெக்டிற்கு அரசு அனுமதி…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.202.54 கோடி மதிப்பீட்டில் 4.30 கி.மீட்டர் நீளத்திற்கு நொய்யல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கோயம்புத்தூர்...

Video

Join WhatsApp