கோவையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபர்!

கோவை: கோவையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை சிவானந்தா காலனி டாடாபாத் முதல் வீதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (23). துணி வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று ரத்தினபுரி ராஜூ நாயுடு தெருவில் சரக்கு வாகனத்தில் துணி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் லோகேஸ்வரனிடம் நான் இந்த ஏரியாவில் பெரிய ரவுடி, இங்கு வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் தனக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என மிரட்டினார்.

Advertisement

அவர் கொடுக்காததால் அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்து கொண்டு தப்பிச்சென்றார். இது குறித்து லோகேஸ்வரன் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் மாமூல் கேட்டு பணம் பறித்தது ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட்டை சேர்ந்த லாரன்ஸ் (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

அவரிடம் இருந்து ரூ.1000, ஒரு கத்தி, ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் சிறுவர்களை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிர சகோதரர்கள் கைது

கோவை: கோவையில் சிறுவர்களைப் பயன்படுத்தி பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் சிலர் சிறுவர்களை வைத்து பிச்சை எடுக்க வைப்பதாக...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...