பெண்களின் பாதுகாப்பை மையமாக கொண்டு மாரத்தான்- கோவை போலிஸ் கமிஷனர் அறிவிப்பு…

கோவை: பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கோவையில் மரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பெண்களின் பாதுகாப்பு, சுய மேம்பாடு மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்கும் நோக்கில், வரும் பிப்ரவரி 22ஆம் தேதி பெண்களுக்கான பிரத்தியேக அதிகாலை நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

இந்த மரத்தான் போட்டிக்கான லோகோ அறிமுக நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநகர காவல் ஆணையர் கண்ணன் கலந்து கொண்டு லோகோவை அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் கண்ணன், ஜெம் மருத்துவமனை நடத்தும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என தெரிவித்தார். குறிப்பாக பெண்களுக்கான இந்த விழிப்புணர்வு முயற்சி மக்கள் மத்தியில் பெரிய அளவிலான பாதுகாப்பு உணர்வையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்றார்.

மேலும், இந்த மரத்தான் போட்டியில் காவல் துறையும் பங்கேற்று பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கூறினார். கோவை நகரில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க தேவையான அடிப்படை வசதிகள் ஏற்கனவே உள்ளதாகவும், எதிர்காலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp