கோவை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையை சேர்ந்த கலைஞர் திராட்சை ரசத்தில் இயேசு ஓவியம் வரைந்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையானது வருகின்ற 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை கொண்டாட கிறிஸ்துவ மக்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திராட்சை ரசத்தில் இயேசுநாதர் ஓவியத்தை கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற கலைஞர் வரைந்துள்ளார்.

இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பழரசம் தீர்ந்த போது இயேசு தண்ணீரை பழரசமாக மாற்றி அனைவருக்கும் விருந்தளித்தார் என குறிப்புகளில் உள்ள நிலையில் அதனை மையமாக கொண்டு UMT ராஜா திராட்சை ரசத்தில் இயேசுநாதர் ஓவியத்தை வரைந்துள்ளார்.
வழக்கமாக ஓவியத்திற்கு பயன்படுத்தும் பிரஸ் ஆகியவற்றை பயன்படுத்தாமல் கம்பிகளை கொண்டே ஏழு மணி நேரம் செலவழித்து இந்த ஓவியத்தை வரைந்துள்ளார்.

