கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் பட்டப்பகலில் கொள்ளை…

கோவை: கோவை கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கோவை, கவுண்டம்பாளையம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகலில் ஒரு மணி நேரத்தில் 7 க்கு மேற்பட்ட வீடுகள் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையத்தி அரசு அலுவலர்கள் வாடகைக்கு குடியிருப்போர் குடியிருப்புகள் உள்ளது. வீட்டு வசதி வாரியத்தால் அரசு ஊழியர்களுக்காக கட்டப்பட்டது. இது 8 பிளாக்குகளில் தலா 14 மாடிகளுடன் மொத்தம் 1,848 வீடுகளைக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணி முதல் சுமார் 1 மணி வரை C – 3 பிளாக்கில் குடி இருந்த விமலா, ரேணுகா, கிருஷ்ணசாமி, சந்திரன் உள்ளிட்ட ஏழுக்கு மேற்பட்ட வீடுகளில் சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து பூட்டுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கவுண்டம்பாளையம் காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் வாடகைக்கு குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் அடுத்தடுத்து ஏழுக்கு மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து திருடப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent News

Video

Join WhatsApp