கோவை: கோவை மதுக்கரை அருகே வீட்டின் காம்பவுண்டு சுவரை காட்டு யானை தாண்டி சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியை சேர்ந்தவர் சிந்து. மதுக்கரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை , சிந்துவின் வீட்டில் உள்ள வாழை, தென்னை மரங்களை சாப்பிட்டுள்ளது.
இதனை பார்த்தவர்கள் சிந்துவிற்கு போன் செய்து இதனை தெரிவித்துள்ளனர். பின்னர் மாடிக்கு சென்ற சிந்து தனது செல்போன் மூலம் யானையை வீடியோ பதிவு செய்துள்ளார். தோட்டத்தில் இருந்த வாழை, தென்னை ஆகியவற்றை சாப்பிட்ட யானை, பின்னர் எவ்வித சேதமும் ஏற்படுத்தாமல் காம்பவுண்ட் சுவரை தாண்டி வெளியேறியது.
அப்போது தெருவில் இருந்த ஒரு சிறுவனைப் பார்த்தவுடன், அந்த யானை விரட்டி சென்ற நிலைய நல்வாய்ப்பாக அந்த சிறுவன் வீட்டிற்குள் புகுந்து தப்பினார்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

