கிராமபுறங்களில் ஆவின் விற்பனையகங்கள்- கோவையில் பால்வளதுறை அமைச்சர் கூறிய தகவல்…

கோவை : கிராமப்புறங்களில் ஆவின் பொருள்கள் விற்பனையகங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்…

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பால்வளத் துறையின் சார்பில் மிஷன் ஒயிட் வேவ் என்னும் திட்டத்தின் பயிற்சி பட்டறையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து எம்பிஏ மாணவர்களிடம் கலந்துரையாடினார்

Advertisement

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடைகள் வாங்குவதற்கு கடன் வழங்குவது என்ற செயல் திட்டத்தையும் மாநிலத்தில் இருக்கக்கூடிய அனைத்து பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 9120 கூட்டுறவு சங்கங்ளை லாபத்தில் இயங்குகின்ற சங்கங்களாக மாற்றக்கூடிய செயல் திட்டத்தை வடிவமைத்திருப்பதாக தெரிவித்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை இந்த நான்கு ஆண்டுகளில் துவக்கி இருப்பதாகவும் இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படக்கூடிய சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் செயல்படாத சங்கங்கள் லாபம் ஈட்டாத சங்கங்களை மேம்படுத்த MBA மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து “மிஷின் ஒயிட் வே” திட்டத்தின் மூலம் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் அந்த மாணவர்கள் மூன்று மாத காலம் சங்கங்களுடன் இணைந்து பயணிப்பார்கள் என தெரிவித்தார். இந்தத் திட்டம் வெற்றிபெறும் போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சங்கங்களும் லாபத்துடன் இயங்கும் என தெரிவித்த அவர் இதனால் பால் உற்பத்தி அதிகரிக்கும் விவசாயிகளின் சேவையும் அதிகரிக்கும் ஆவின் பொருட்கள் விற்பனையும் அதிகரிக்கும் என தெரிவித்தார்.

Advertisement

ஆவின் பொருட்கள் விற்பனையகங்களை கிராமப்புறங்களில் விரிவுபடுத்துவது தொடர்பாக முதலமைச்சர் அறிவுறுத்தி இருப்பதாகவும் கவனம் செலுத்த கூறி இருப்பதாகவும் தெரிவித்த அவர் இன்னும் சில மாதங்களில் அதன் விரிவாக்கத்தை பார்க்கலாம் என தெரிவித்தார். கூடிய விரைவில் கிராமப்புற ங்களில் ஆவின் பொருட்கள் விற்பனையகங்களை தொடங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள்.

தற்போது துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் இன்ஜினியர் மாணவர்களை தவிர்த்து ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

AI தொழில்நுட்பம் குறித்து பேசிய அமைச்சர், சமூக வலைத்தளங்கள் வந்த பொழுது நல்லது ஒரு புறம் தீயது ஒரு புறம் இருந்ததாகவும் அதனை பயன்படுத்தும் வகையில் தான் அனைத்தும் உள்ளது என சுட்டிக்காட்டினார். AI Is The Product of Human Intelligence. இதனை பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் நல்லது என தெரிவித்தார். மனித மூளை மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் அதன் சக்தியை தற்பொழுது வரை நாம் கண்டுபிடிக்கவில்லை என்றும் தெரிவித்த அவர் AI Is Product of Human Mind என்றார்.

இந்த அரசு ஆயிரம் கோடி ரூபாய் விவசாய பெரு மக்களுக்கு கடன் வழங்குகிறது எனவும் அதில் வட்டி இல்லா கடணம் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் மாநில அளவில் பாலின் தரமும் உயர்ந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆவினில் பல்வேறு புதிய பொருட்கள் தயாரிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் வைத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அவர் One Side of Coin தான் பார்ப்பதாகவும் இந்தத் துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர் விமர்சனம் செய்பவர்கள் நேர்மையான மனதுடன் விமர்சனம் செய்தால் நல்ல விஷயங்களையும் கூற வேண்டும் இதெல்லாம் அரசியல் விமர்சனங்கள் இதையெல்லாம் செய்தியாளர்கள் நீங்கள் ஆதரிக்கக் கூடாது என தெரிவித்தார்.

மேலும் ஒரு பெரிய பொறுப்பில் இருக்கும் தலைவர் இங்கு பொறுப்பு திருட்டுப் போய் உள்ளது என்றெல்லாம் பேசினார் என்றும் அவரை விமானத்தில் சந்தித்து பேசும் பொழுது தவறான பேச்சை நீங்கள் பேசி உள்ளீர்கள் அதற்கான விளக்கத்தையும் நான் கூறியதை அடுத்து அவர் என்னை பாராட்டி சென்றார் என தெரிவித்தார். அரசியல் தலைவர்கள் காது வழி செய்தியை எடுத்துக்கொண்டு அரசியல் பேசக்கூடாது என்றும் பொறுப்புணர் உள்ள தலைவர்கள் பேசவே கூடாது என்றும் என்ன உண்மை உள்ளது என்று பார்த்து பேசுவது தான் ஆரோக்கியமான ஒன்று என தெரிவித்தார்.

Recent News

நவம்பர் 1ம் தேதி முதல் வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்- இ- பாஸ் பதிவு செய்ய லிங்க் இதோ..

கோவை: நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து வால்பாறைக்கு செல்ல இ-பாஸ் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறைக்கு வருகின்ற...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp