கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் பயணிகள் மீது மோதியதில் இளம் பெண் உயிரிழந்தார். முவர் படுகாயமடைந்தனர்.
காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு வாளையார் செல்வதற்காக 96 என்ற எண் கொண்டு அரசு தாழ்தள சிறப்பு சொகுசு பேருந்து கிளம்பியது.
அப்பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் நின்றிருந்த மற்றொரு மினி பேருந்து உட்பட நான்கு பேருந்துகள் மற்றும் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலே கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தைச் சேர்ந்த ஹரிணி என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் அங்கு நின்று இருந்த மதுக்கரை பகுதியைச் சேர்ந்த வின்சி, சத்யா மற்றும் அடையாளம் தெரியாத 55 வயது நபர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து பயணிகள் மற்றும் பேருந்துகள் மீது மோதிய விபத்தில் 19 வயது இளம் பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



