கோவை: காந்திபுரம்- அன்னூர் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை- அன்னூர் வழித்தடம் கோவையின் முக்கிய வழித்தடமாக உள்ளது. இந்த வழித்தடத்தில் அதிகமான பள்ளிகள், கல்லூரிகள், தொழில்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரி வேலைகளுக்கு செல்வோர் கூட்டம் அதிகமாக இருப்பதால் பேருந்துகளில் அதிக கூட்டத்துடன் ஆபத்தான முறையில் பயணம் செய்ய நேரிடுவதாகவும் எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளில் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
குறிப்பாக கோவில்பாளையம் குரும்பபாளையம் போன்ற முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அதிகளவிலான பயணிகள் ஏறுவதால் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கை மீது கவனம் செலுத்தி கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.