Header Top Ad
Header Top Ad

கோவையில் அக்ரி இன்டெக்ஸ் சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது

கோவை: கோவையில் அக்ரி இன்டெக்ஸ் சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது…

கோவை கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் சர்வதேச வேளாண் கண்காட்சி துவங்கியது…

கோவை கொடிசியா தொழில்பேட்டை வளாகத்தில் 2025 அக்ரி இன்டெக்ஸ் சர்வதேச வேளாண் கண்காட்சி இன்று துவங்கியது. 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 400 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Single Content Ad

பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களை சார்ந்த தொழில்துறையினர் அவர்களது இயந்திரங்களும் வேளாண் உபகரணங்களையும் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த கண்காட்சியை காண்பதற்கு பொதுமக்களுக்கு ஐம்பது ரூபாய் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது விவசாயிகளுக்கு இலவசமாகும்.
அதுமட்டுமின்றி கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலைத் துறை சார்ந்த அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஜே.எஸ் அக்ரோ நிறுவனம் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் மண்ணை தோண்டுவதற்கும் சமன்படுத்துவதற்கும் ஏற்றார் போல் கலப்பை மற்றும் சமன்படுத்தும் ஹைட்ராலிக் டெலிவர் ஆகிய இரண்டையும் ஒரே இயந்திரத்தில் வடிவமைத்துள்ளனர். ஜப்பான் தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கோவை கிளாசிக் industries எனும் நிறுவனம் ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய இயந்திரங்களை வடிவமைத்துள்ளது இதன் மூலம் விவசாயிகள் இறந்த இடத்திலிருந்து மண்ணை உழுவது போன்ற பல்வேறு வேலைகளை செய்து கொள்ளலாம் என அந்நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest Articles