கோவை: அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைத்துறை சார்பில் அங்கக வேளாண்மை மற்றும் அங்கக வேளாண் பொருட்கள் உற்பத்தி குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், அங்கக வேளாண் பொருட்கள் கண்காட்சியினை துவக்கி வைத்தார்.

மேலும், உழவர் உற்பத்தியாளர் சங்கத்தினர், விவசாயிகள் சார்பில் காட்சிபடுத்தபட்டு இருந்த உணவுப்பொருட்கள் உரங்கள், மற்றும் இயற்கை உரங்களை பற்றி கேட்டறிந்தார்.
இதனையடுத்து அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு தொடங்கி நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர், விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்கள் அங்கக உரங்கள் மற்றும் அங்கக உரத்தயாரிப்பு தொடர்பாக பயிற்சி பெற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
இந்த ஒரு நாள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.