அதிமுக பாஜக கூட்டணி திமுகவினருக்கு பயத்தை கொடுத்துள்ளது- எஸ்.பி.வேலுமணி பேட்டி!!!

கோவை: அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி உருவானது தி.மு.க வினருக்குப்பயத்தை கொடுத்து உள்ளது என எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார் !!!

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசியவர் :-

கோவையில் சிறுவாணி அணையின் பிரச்சனை மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. 10 நாட்களில் எடப்பாடி பழனிச்சாமியின் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த போது சிறுவாணி அணையில் 50 அடி நீர் தேக்கினார்கள், அதன் பிறகு ஐந்து அடி குறைத்தார்கள், தி.மு.க அரசு கோவை மாவட்டத்தை கண்டு கொள்வதில்லை. இதனால் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

சிறுவாணி அணையை தூர்வாருவதற்கு முயற்சி செய்யபட்டது. அதை இந்த அரசு கிடப்பில் போட்டு உள்ளது என தெரிவித்தார்.

மேலும் கேரளா அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தவில்லை என தான் சட்டமன்றத்திலேயே பேசியதாகவும், 50 அடி தேக்க வேண்டிய சிறுவானி அணையில் 40 அடி மட்டுமே தேக்குவாதகவும், கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டினார்.

கோவையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது முக்கிய பிரச்சனையாக சிறுவாணி அணை உள்ளது. சேகரிக்க கூடிய தண்ணீரை கேரளா அரசு திறந்து விட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

பேரூரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பேரூர் ஆதீனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பான கேள்விக்கு,தமிழகத்துக்கு பெருமை தரக் கூடிய ஒரு மகா சன்னிதானம் ராமலிங்க அடிகளாரின் நூற்றாண்டு நிகழ்ச்சிக்கு மருதாச்சலம் அடிகளார் அழைப்பு கொடுத்ததாகவும், ஆண்டுதோறும் அங்கு சென்று ஆசீர்வாதம் பெற்று வருவது வழக்கம் தான் எனவும், ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த, நிலையில் அடிகளாரின் நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவரை அழைத்து உள்ளார்கள் எனவும் நூற்றாண்டு விழாவிற்கு எங்களை அழைத்தார்கள், அதற்காகத் தான் சென்றதாகவும், அதற்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் தொடர்பு இல்லை என பதில் அளித்தார்.

அடிகளாரின் நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் சிறப்பு அழைப்பாளராக வந்து இருக்கிறார், அந்த நிகழ்ச்சி எனது தொகுதியில் நடைபெறுவதால் எனக்கு அழைப்பு கொடுத்தார்கள் எனவும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்க மாட்டார்கள், நாங்களும் அவர்களை அழைக்க மாட்டோம் என தெரிவித்தார்.

தி.மு.க தனது கையாலாகதனத்தால், பெரிய மகானுடைய நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றதை திருத்தி கிளப்பி விடுகிறார்கள் இது மனசாட்சி இல்லாதவர்கள் செய்கிற வேலை என குற்றம் சாட்டினார்.

ஆர்.எஸ் பாரதி கூறிய கருத்துக்கு பதிலளித்த எஸ்.பி.வேலுமணி, அவர் எப்போது பேசினாலும் பொய் மட்டும் தான் பேசுவார் எனவும் ஆர்.எஸ்.பாரதி என்ன ? நடக்கிறது என்பது பார்த்து பேச வேண்டும் எனவும் முருகன் மாநாட்டுக்கு எங்களது முன்னாள் அமைச்சர்கள் சென்றார்கள், அழைப்பு கொடுத்ததால் சென்றார்கள், அங்க போகும் போது அண்ணா குறித்தோ, பெரியார் குறித்தோ வீடியோ வெளியாவது தெரியாது. எனவும் முருகன் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்ட மாநாடு, முருகன் மாநாட்டுக்கு சென்றதில் தவறு இல்லை என தெரிவித்தார்.

ஆர்.எஸ்.பாரதி 1999 ல் பா.ஜ.க கூட்டணியில் இருந்த்த போது தெரியாதா ? என கேள்வி எழுப்பிய எஸ்.பி.வேலுமணி

கடந்த 2024 – தேர்தலின் போது அண்ணா குறித்து பேசியதற்கு எவ்வாறான துணிச்சலான முடிவு எடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் கூட்டணி வேறு, கொள்கை வேறு.

குறிப்பாக எங்களது தலைவர் எடப்பாடி கொள்கையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டார் எனவும் வஃகு போர்டு சட்டம் வருவம் போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக, கூட்டணி எதிராக வாக்களித்தை சுட்டிக்காட்டினார்.

இந்த அரசு தோல்வி அடைந்து விட்டது, அதனால் என்ன வேணாலும் பேசி திசை திருப்ப பார்க்கிறார்கள், அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமைந்த பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி விடுவார் என்ற அச்சத்தில் கிளப்பி விடுகிறார்கள் எனவும் தி.மு.க போல, ஆர்.எஸ்.பாரதி, போல சுயநலம் இல்லாத கட்சி அ.தி.மு.க எனவும். எப்போதும் சிண்டு முடியும் வேலைய தான் ஆர்.எஸ்.பாரதி பார்க்கிறார்கள், வயதாகி விட்டது என தெரிவித்தார்..

நாங்கள் தேர்தலுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். ஆனால் என்றைக்கும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் அ.தி.மு.க எப்போதும் எடப்பாடி தலைமையில் கொள்கையை விட்டுக் கொடுக்காத சுயமரியாதை இயக்கமாக இருக்கும் எனவும் இன்னும் அதிகமான கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும், அப்போது தெரியும் என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.