கோவையில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட AIYF…

கோவை: கோவையில் இளைஞர் பெருமன்றத்தினர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசை கண்டித்து இளைஞர் பெருமன்றத்தினர் ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, தபால், பிஎஸ்என்எல் உள்ளிட்ட ஒன்றிய அரசு துறைகளில் 1 லட்சம் பணியிடங்களை பறித்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் அவ்வமைப்பினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பேட்டியளித்த அவ்வமைப்பின் மாநில துணைச் செயலாளர் கலை அஸ்வினி ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து வருகிறார் என்றார்.

தமிழ்நாட்டில் ஒரு லட்சம் ஒன்றிய அரசு வேலை இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு துறைகளில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டு, வட மாநில இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றார்.

இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஒன்றிய அரசு துறை வேலைகளில் தமிழ் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என கூறினார்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்

Recent News

Video

Join WhatsApp