Header Top Ad
Header Top Ad

அக்ஷயதிருதியை 2025 : நெல்மணியில் நெக்லஸ் செய்து அசத்திய கோவை ஆர்ட்டிஸ்ட்! – வீடியோ

கோவை: அக்ஷயதிருதியை நாளில் விவசாயம் செழிக்க வேண்டி நெல்மணியில் ஆபரணங்கள் வடிவமைத்துள்ளார் கோவைச் சேர்ந்த கலைஞர் யு.எம்.டி.ராஜா.

அக்ஷயதிருதியை நாளில் செய்யப்படும் முதலீடுகள் பல்கிப்பெருகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. நாளை இப்பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதுபோலவே விளை பொருட்களை வைத்து இந்த நாளில் வழிபட்டால் விவசாயம் செழிக்கும், மழை பொழிவு நன்றாக இருக்கும் என்று விவசாயிகளும் நம்புகின்றனர்.

இதனிடையே குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த UMT ராஜா என்ற நகை வடிவமைப்பு கலைஞர் அட்சய திருதியில் தங்கம் செழிப்பது போலவே விவசாயமும் செழிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் வகையில் நெல்மணிகளைக் கொண்டு நகையை வடிவமைத்துள்ளார்.

ஒரு நெக்லஸ், ஒரு ஜோடி கம்மல், மற்றும் ஒரு டாலரை நெல்மணிகளை கொண்டு வடிவமைத்துள்ளார்.

Recent News