கோவை: கூட்டணி தொடர்பாக உயர்மட்ட குழு உரிய அறிவிப்புகளை விரைவில் அறிவிக்கும் என காங்கிரஸ் தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா துணை முதல்வருக்கு இரங்கல் –காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா பேட்டி அளித்தார்.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், விமான விபத்தில் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கும், மகாராஷ்டிரா மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
மேலும், தற்போதைய அரசியல் சூழலில் இண்டியா கூட்டணி வலுவாகவும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதாக கூறினார். மக்கள் நலன் சார்ந்த அரசியலே இண்டியா கூட்டணியின் அடிப்படை நோக்கம் என்றும், வருங்கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ச்சியாக TVK விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவது தொடர்பான கேள்விக்கு அவர் High Command கிடையாது…high command தான் முடிவு செய்யும் என பதில் அளித்தார்.
காங்கிரஸ் எம்பி எம்எல்ஏக்கள் மூத்த உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் டெல்லியில் ஆலோசனை நடத்தி முடித்துள்ளோம்
கூட்டணி தொடர்பாக உயர்மட்ட குழு உரிய அறிவிப்புகளை விரைவில் அறிவிக்கும் என கூறிய அவர் கட்சியினர் என்ன நினைக்கிறோம் என்பது குறித்து உயர்மட்ட குழுவில் கூறியிருக்கிறோம் என்றும் கூட்டணி தொடர்பான வதந்திகள் ஊடகங்களில் தான் வருகின்றன எனவும் கூறினார்.
TVK உடன் காங்கிரஸ் இருந்தால் வலுப்பெறும் என விஜயின் தந்தை கூறிய தொடர்பாக கேட்ட போது அது அவருடைய கருத்தாக இருக்கலாம். எங்கள் கட்சியை பூத் அளவில் இருந்து வலிமைப்படுத்த என்ன தேவையோ அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என கூறி முடித்தார்

