கடந்த 1981ம் ஆண்டு பாக்யராஜ் முதன் முதலாக கதாநாயகனாக நடித்த அந்த 7 நாட்கள் வெளியானது. பாக்யராஜ்-அம்பிகா இணைந்து நடித்து க்ளாசிக் சினிமாவான இது தமிழ் சினிமாவில் காதல் மற்றும் உணர்ச்சிகளின் மோதலை எளிமையாகவும் சொன்னது இந்த படம்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வந்த பாடல்கள் அப்போது பெரும் ஹிட்டாகி, இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன
படம் வெளியாகி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், அந்த வரலாற்றுப் பெயர் மீண்டும் தமிழ் சினிமாவில் இடம்பெற்றுள்ளது. அந்த 7 நாட்கள் படத்தின் ரீமேக் -ஆக இல்லாமல் புதிய கதை, புதிய பரிமாணத்தில், இன்றைய தலைமுறைக்கான காதல் த்ரில்லராக வருகிறது வருகிறது புதிய “அந்த 7 நாட்கள்”
சிறப்பு விஷயமாக, இந்தப் படத்திலும் நடிகர் பாக்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படத்தை பெஸ்காஸ்ட் ஸ்டுடியோர் கபீர்தாஸ் தயாரிக்க, எம்.சுந்தர் இயக்குகிறார். அஜிதேஜ் & ஸ்ரீஸ்வேதா முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர்.
திரில்லர்
காதல் ஒருபக்கம், திரில்லர் ஒரு பக்கம் என்ற கதைக்களத்தில் படம் அமைந்துள்ளது. தற்போது இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது.
சச்சின் சுந்தர் இசையமைத்துள்ளார், கோபிநாத் துரை ஒளிப்பதிவும், முத்தமிழன் ராமு படத்திகுப்பு & VFX பணிகளை கவனித்துள்ளார்.
செப்டம்பர் 12ம் தேதி இப்படம் வெளியாகிறது.