இங்கிதம் இல்லாம பேசக்கூடாது… விஜய் விவகாரம் குறித்து பிரபல நடிகர் பேச்சு!

விஜய் விவகாரத்தில் இங்கிதம் இல்லாமல் பேசக்கூடாது என பிரபல நடிகர் பேசியுள்ளது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய், தனது சினிமா கேரியரில் இருந்து விலகி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் கட்சி தீவிரமாக தேர்தல் பணியாற்றி வரும் சூழலில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவகாரம் வெடித்துள்ளது.

கட்சி தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் மத்தியில் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பேசு பொருளாகியுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க விஜய் மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு தான் காரணம்.

விவாகரத்து மனுவில், திருமணத்தை மீறிய உறவில் விஜய் நடிகையுடன் இருந்ததாகவும், எனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகை யார் என்று வெளியில் சொல்ல நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தார்.

Advertisement

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், சம்மந்தப்பட்ட விஜய் எதுவும் பேசாமல், மறுநாளே திரிஷாவுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின விழாவில் பங்கேற்று பேசிய விஜய், தேர்தலில் தான் முழுகவனம் செலுத்த வேண்டும், என் பிரச்சனையை நான் பார்த்துக்கொள்கிறேன், என் பிரச்சனையை பற்றி நீங்கள் நினைத்து ஃபீல் பண்ணுவது எனக்கு கஷ்டமாக உள்ளது. அந்த பிரச்சனை அவ்ளோ Worth இல்லை என பேசினார்.

Advertisement
Vijay divorce controversy

மனைவியை Worth இல்லை என பேசியதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்து விழுந்தன. சங்கீதா குறித்து தவெகவினரும், நெட்டிசன்களும் இழிவாக பேசியிருந்தனர். ஆனால் விஜய் இது குறித்து எந்த கண்டனமோ தெரிவிக்கவில்லை.

சோஷியல் மீடியா முழுவதும் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இந்த நிலையில் நடிகர் ஜான் விஜய், விஜய் குறித்து பேசிய விஷயங்கள் பலரது பார்வைகளை திரும்பி பார்க்க வைத்துள்ளன.

ஜான் விஜய் கூறியதாவது, அரசியலுக்கு விஜய் வந்துள்ளது சக நடிகனாக எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். அவர் மக்களுக்காக என்ன செய்ய போகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

John Vijay Supports Actor Vijay

தமிழ்நாட்டுக்கு அவர் என்ன செய்யபோகிறார் என்பதை பற்றி நாம் பேசலாம். ஆனால் அவர் பாத்ரூமில் என்ன செய்கிறார் என பேச நம்மில் யாருக்கும் அருகதை இல்லை.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நாம் பேச யார்? என கூறிய அவர், அவருடைய தனிப்பட்டடை வாழ்க்கை குறித்து பேசுவது இங்கிதமற்ற செயல் என்று தான் நான் கூறுவேன் என ஓபனாக பேசியுள்ளார்.

Flipkart Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

தனுஷூக்கு அரசியல் எதிர்காலம் இருக்கு… விஜய்யால் முதல்வர் கனவில் வரிசை கட்டி நிற்கும் நடிகர்கள்…!

கோவை: எம்ஜிஆருக்குப் பிறகு யாரும் சினிமாவில் இருந்து வந்து அரசியலில் ஜெயிக்க முடியாது என்ற பேச்சுக்களை தவிடு பொடியாக்கிய முதல்வர் விஜய்யின் அரசியல் வளர்ச்சி, தமிழ் சினிமா திரையுலகில் பலருக்கும் முதல்வர் ஆசையை...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...