திகைப்பையூட்டும் வகையில் அந்த 7 நாட்கள் படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குனரும், நடிகருமான பாக்கியராஜின் அந்த 7 நாட்கள் திரைப்படம் கடந்த 1981ம் ஆண்டு வெளியானது. இதனிடையே அதே தலைப்பில், மீண்டும் பாக்கியராஜ் நடிக்கும் அந்த 7 நாட்கள் படம் இந்த மாதம் வெளியாகிறது.
இப்படத்தில் புதிய முகங்கள் அஜிதேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் முரளி கபீர்தாஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.சுந்தர் இயக்கியுள்ளார்.
சச்சின் சுந்தர் இசையில் வெளியான ரதியே ரதியே பாடல் சமீபத்தில் டிரெண்டான நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
ரொமான்ஸ் திரில்லர் கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது என்று ஏற்கனவே படக்குழு அறிவித்ததை, இந்த படத்தின் டிரெய்லர் உறுதி செய்துள்ளது.
படத்தின் டிரெய்லரை இங்கே காணலாம்:
படத்திற்கு கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை முத்தமிழன் ராமு தரமான முறையில் செய்துள்ளார். படம் செப்டம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.