கோவை: அங்கன்வாடி மையத்தின் இடத்தை ஆக்கிரத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது மீட்டு தர வலியுறுத்தி ஆண்டிபாளையம் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை வேடப்பட்டி கிராமம் ஆண்டி பாளையத்தில் அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் அருகில் கருப்புசாமி என்பவர் குறிப்பிட்ட இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி அதனை மீட்டு தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்தப் பகுதியை நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து மீட்டுக் கொடுத்தால் அங்கன்வாடி மையத்தை விரிவு படுத்த முடியும் எனவும் அது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் ஆக்கிரமித்து உள்ள நிலம் அரசு நிலம் தான் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் இருப்பதாக தெரிவித்த ஊர் மக்கள் சண்முகசுந்தரம், அவருக்கு யாரோ உதவி புரிந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

