கோவையில் மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழப்பு

கோவையில் மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழந்தது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…

Advertisement

கோவை வனக்கோட்டம், மதுக்கரை வனச்சரகம், கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி பிளாக் 1, யானைகல் சராகம் பகுதியில் வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியின் போது பெண் யானை ஒன்று நேற்று உடல்நிலை சரியில்லாமல் மெலிந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்த வனத் துறை இது குறித்து மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

தகவலின் பேரில் உடனடியாக கோவை வனக் கால்நடை மருத்துவர் மூலம் நேற்று மாலை முதல் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த யானை சிகிச்சை பலனின்றி இறந்தது,

பின்னர் உதவி வன பாதுகாவலர் தலைமையில் தன்னார்வலர்கள் முன்னிலையில் கோவை வன கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் யானை உயிரிழப்புக்கு முழுமையான காரணம் தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் வந்த காட்டு யானை ஒன்று உடல்நிலை குறைவால் உயிர் இழந்தது. அதனைப் பிரேத பரிசோதனை செய்து பார்க்க போது, வயிற்றில் 15 மாதமாக குட்டி யானை இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள், காயங்கள் புழுக்கள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வனப்பகுதியில் ஒட்டி பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதால் இது போன்று பல்வேறு வனவிலங்குகள் தொடர்ந்து உயிர் இழப்பதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Recent News

வடகிழக்கு பருவமழை- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வலியுறுத்தல்…

கோவை: வடகிழக்கு பருவமழை அதிகமாக இருப்பதால் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 146.04 மி.மீட்டர் பதிவாகி உள்ளது. மேலும்,...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group