Header Top Ad
Header Top Ad

கோவையில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு- முழு விவரங்கள் இதோ…

கோவை: அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்…

கோயம்புத்தூர் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் எலெக்ட்ரீசியன். பிட்டர். மெஷினிஸ்ட், டர்னர்ஒயர்மேன், வெல்டர். டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் மெக்கட்ரானிக்ஸ், டெக்னீசியன் மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ். கணினி ஆபரேட்டர் அதிநவீன வசதிகளுடன் கூடிய Industry 4.0 போன்ற தொழிற்பிரிவு படிப்புகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

www.skilltrainingtn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பிக்க ஜூன் 13-ஆம் தேதி கடைசி நாளாகும். சேர்க்கையில் சேர விரும்புவோர் 8-ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கோயம்புத்தூரிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான கோயம்புத்தூர். கோயம்புத்தூர் (மகளிர்), ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகிய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகவும்.

பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபட கருவிகள், காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும். மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/-ம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ – மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின்படியும் மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகையும் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான கோயம்புத்தூர் (88254 34331)கோயம்புத்தூர் (மகளிர்) (97156 26813) ஆனைக்கட்டி (88383 39946)வால்பாறை (94421 75780) மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் (95665 31310 81220 47178) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Recent News

Latest Articles