கோவையில் ஊர்காவல் படையில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…

கோவை: கோவையில் ஊர்காவல் படையில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் கொடுக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், உத்தரவுப்படி கோவை மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஊர்க்காவல்படை தேர்வு நடத்தப்படவுள்ளது.

ஊர்க்காவல் படையில் சேர்ந்து காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற விருப்பமுள்ள கோவை மாநகர மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் வருகின்ற 15.12.2025 ஆம் தேதியன்று மாலை 5.00 மணிக்குள் கோவை காந்திபுரம் C1 காட்டுர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள கோவை மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் மற்றும தேர்ச்சி பெறாதவர், 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள், 31.12.2025 என்றும்
மேலும் விவரங்களுக்கு
94981-71363, 94981-72525 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp