கோவையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க குவிந்த விண்ணப்பங்கள்!

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, முகவரி மாற்றம் தொடர்பாக ஒரு லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மாவட்டத்தில் 15,71,513 ஆண் வாக்காளர்களும், 16,44,928 பெண் வாக்காளர்கள், 686 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 32 லட்சத்து 17 ஆயிரத்து 129 வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisement

3,117 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் நெருங்குவதால் 1,200 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்குச்சாவடிகள் பிரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

100 வயதை கடந்த வாக்காளர்களின் இருப்பை நேரில் உறுதி செய்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றத்துக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பத்தை ஆய்வு செய்து பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘‘ முகாம்கள் மூலமாகவும், ஆன்லைனிலும், தேர்தல் பிரிவில் நேரடியாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை 10 மாதங்களில் 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், பெயர் சேர்க்க அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளது.

இவற்றை ஆய்வு செய்து நவம்பர் மாதத்தில் வெளியிட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களை உறுதி செய்ய கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது’’. என்றனர்.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group