ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அரபு நாடுகளில் வெடிச்சத்தம் கேட்பதால், அங்கு வசிக்கும் தமிழர்களின் நிலை குறித்து, இங்குள்ள உறவினர்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் இடையே அணுசக்தி திட்டம், ஈரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேல் மீது நடத்தும் தாக்குதல்கள், அரசியல் மற்றும் பிராந்திய ஆதிக்கத்தால் அடிக்கடி தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் சமரசம் பேசினார். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து இன்று மதியம் 1.30 மணியளவில் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளன. இதனால் ஈரானில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் லைன்ஸ் ரோர்’ என்று பெயர் வைத்துள்ளது இஸ்ரேல். அதாவது சிங்கத்தின் கர்ஜனை என்ற பெயரைச் சூட்டி இந்த தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
மாணவர்கள் பலி
இதனிடையே ஈரானில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் மீது அமெரிக்கப்படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இதுவரை 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
தாக்குதல் வீடியோ காட்சி 1
கத்தாரில் நடைபெற்ற தாக்குதல் pic.twitter.com/DpBwLAiaSN
— News Clouds Coimbatore (@newscloudscbe) February 28, 2026
இந்த தாக்குதலால் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஈரான் உட்பட பல்வேறு நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.
ஈரான் தனது ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும் என்றும், அந்நாட்டின் ஆயுதங்களை அழித்து, நாட்டையே கைப்பற்றுவோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
தாக்குதல் வீடியோ காட்சி 2
Middle East Burns#Isreal #IranAttack #Iran #USAttackOnIran pic.twitter.com/kapKoPhP60
— News Clouds Coimbatore (@newscloudscbe) February 28, 2026
இருநாடுகளுக்கும் பதிலடி கொடுப்போம் என்று கூறியுள்ள ஈரான், இந்த விஷயத்தில் ஐநா சபை தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தொடர் தாக்குதல்களால் எரிச்சலடைந்துள்ள ஈரான் தனது தரப்பு தாக்குதலையும் தொடங்கியுள்ளது.
வெடிச்சத்தம்
அமெரிக்காவின் படைத்தளங்கள் மீது ஈரான் தனது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக அரபு நாடுகளில் அமெரிக்காவின் படைத்தளங்கள் மீது தற்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தற்போது வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், கத்தார், அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளிலும் வெடிச்சத்தம் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் வீடியோ காட்சி-3
Middle East Burns#Isreal #IranAttack #Iran #USAttackOnIran pic.twitter.com/KmmvAsDGTj
— News Clouds Coimbatore (@newscloudscbe) February 28, 2026
தமிழர்கள் நிலை
பல்வேறு பணிகளுக்காக தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து சவுதி அரேபியாவில் மட்டும் 3.5 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சென்று பணியாற்றி வரும் நிலையில், இது அவர்கள் உறவுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் போலவே கேரள மக்களும் இந்த நாடுகளில் அதிகளவில் வசித்து வருகின்ற நிலையில், இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்களுக்கு பாதிப்பில்லை
இதனிடையே பஹ்ரைனில் வசிக்கும் தமிழர் பொன்.சங்கரபாண்டியன் கூறுகையில், “பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளத்தின் மீது மட்டுமே ஈரான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.” என்றார்.
தாக்குதல் வீடியோ காட்சி-4
Middle East Burns#Isreal #IranAttack #Iran #USAttackOnIran pic.twitter.com/o9PyWqdzk1
— News Clouds Coimbatore (@newscloudscbe) February 28, 2026
இருந்த போதிலும் கத்தார், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடக்கும் வீடியோ காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதனால் தமிழர்கள் மத்தியில் பதற்றமும் அதிகரித்துள்ளது.
தாக்குதல் வீடியோ காட்சி-5
அபுதாபியில் நடைபெற்ற தாக்குதல்#IranRevoIution2026 #IranIsrael #Isreal #Iran #USAttackOnIran pic.twitter.com/DFO8OknbDR
— News Clouds Coimbatore (@newscloudscbe) February 28, 2026
அரபு நாடுகள் உள்ளிட்ட அயலக தேசங்களில் உள்ள தமிழர்கள் தங்களது தற்போதைய நிலையை நியூஸ் கிளவுட்ஸ் வாட்ஸ்அப் எண்ணிற்கு பகிர்ந்தால், அதனை இங்குள்ள தமிழர்களுக்கு செய்தியாக பகிர்ந்து உதவலாம். வாட்ஸ்அப் எண்: +919944438011
அயலக தமிழர்கள் தமிழ் செய்திகளை அறிந்து கொள்ள பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்து வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்: https://chat.whatsapp.com/CTcLVVeLZu9Cs3awNwcgR2

