ஈரான் இஸ்ரேல் போர்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு வெளியிட்டுள்ள லிங்க் வெளியீடு!

ஈரான் இஸ்ரேல் போர்: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

Advertisement

அணுசக்தி திட்டம், பிராந்திய ஆதிக்கம், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது நடத்தும் தாக்குதல்கள் போன்ற காரணங்களால் இந்த மோதல் மீண்டும் வெடித்துள்ளது என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இஸ்ரேல் லயன்ஸ் ரோர் என்ற பெயரில் ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியதாக தெரிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா இந்த நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்றுள்ளதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது.

இதுவரை ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக நேரடியாகவும் மறைமுகவும் பல்வேறு நாடுகள் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

குறிப்பாக, அரபு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் குறிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹ்ரைன், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. இந்நாடுகளில் வெடிச்சத்தம் கேட்பதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சில நாடுகள் உடனடி சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு நிலைமைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை பிரான்ஸ் அதிபர் உட்பட பல்வேறு நாட்டு அதிபர்கள் முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில், அரபு நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது. சவுதி அரேபியா, கத்தார், அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் வேலை செய்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, அந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அங்குள்ள சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவசர தேவைகளுக்காக பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய இந்தைய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

http://www.indembassyisrael.gov.in

போர் சூழ்நிலை மேலும் தீவிரமடையாமல் இருக்க சர்வதேச சமூகம் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் இந்த பதற்றம் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதால், மொத்த உலக நாடுகளும் இந்த பிரச்சனையை திவிரமாக உற்றுநோக்கி வருகின்றன.

அயலக தமிழர்கள் தமிழ் செய்திகளை அறிந்து கொள்ள பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்து வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்: https://chat.whatsapp.com/CTcLVVeLZu9Cs3awNwcgR2

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

TNPSC குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியீடு: விண்ணப்பிக்க லிங்க் இதோ…

TNPSC குரூப்-1 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 26 காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. செப்டம்பர் 6-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஜூன் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...