மதுக்கரையில் தொடங்கியது திருவிழா

கோவை: மதுக்கரை குறிச்சி கிராமத்தில் அரவான் திருவிழா, குறிச்சி அனைத்து சமுதாய பொதுமக்களின் சார்பில் இன்று (16ம் தேதி) தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம் வட்டாட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணைந்து நடத்தும் இந்த விழாவில் இன்று (செவ்வாய் கிழமை) இரவு 8 மணிக்கு குறிச்சி முதுப்பார் விநாயகர் கோயிலில் பூஜை – எல்லை சுட்டுதல், அரவான் கோயிலில் புண்ணியவாசம் கணபதி ஹோமம், அரவான் சுவாமிக்கு உயிர் பிடித்தல், கம்பம் நாட்டுதல், பூ சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்குகிறது.

நாளை (17ம் தேதி) முதல் 22ம் தேதி (திங்கள்கிழமை) வரை இரவு 7 மணிக்கு பூ கம்பம் சுற்றி விளையாடுதல், சிறப்பு பூஜை நடக்கிறது.

23ம் தேதி (செவ்வாய் கிழமை) மாலை 6 மணிக்கு குறிச்சி வேதவல்லி அமிர்தவல்லி சமேத வெங்கட்ரமணர் கோயிலில் ஆஞ்சநேயர் அரவான் சுவாமிகள் கட்டுதல் நடைபெறுகிறது.

24ம் தேதி (புதன்கிழமை) காலை 7 மணிக்கு குறிச்சி அமிர்தவல்லி வேதவல்லி சமேத வெங்கடரமணர் கோயிலில் ஆஞ்சநேயர் சுவாமி அரவான் சிறப்பு அலங்காரம், அரவான் சுவாமி எழுந்தருளதல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.

25ம் தேதி வியாழக்கிழமை மதியம் 12.30 மணிக்கு அரவான் கோவிலில் விழா துவங்குகிறது. இதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு குறிச்சி குளக்கரை கற்பக விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் சுவாமி அரவான் சுவாமி சிறப்பு சீர் முறை வழிபாடு நடக்கிறது.

26ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு சீர் முறை வழிபாடு தொடங்கி இரவு 10 மணி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp