பிரதமர் வருகையை முன்னிட்டு கோவையில் RED ZONE ஆக அறிவிக்கப்பட்ட பகுதிகள்- ட்ரோன்கள் பறக்க தடை…

கோவை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் சில பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 19ஆம் தேதி பிரதமர் மோடி கோவை கொடிசியாவில் நடைபெற உள்ள இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை துவக்கி வைக்க வருகை புரிய உள்ளார். இதனை முன்னிட்டு காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக கோவை விமான நிலையம், கொடிசியா சாலை, கொடிசியா வளாகம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட உள்ளது. மேலும் இப்பகுதியில் 19ம் தேதி போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில் பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகரில் சில பகுதிகள் Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. சிங்காநல்லூர்,SIHS காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள்ளரங்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், சித்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம் மற்றும் பந்தய சாலை ஆகிய பகுதிகள் தற்காலிகமாக Red Zone ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (17.11.2025) மாலை 7 மணி முதல் 19.11.2025 தேதி மாலை 7 மணி வரை ட்ரான்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News

Video

Join WhatsApp