Header Top Ad
Header Top Ad

3 வயது சிறுவனுக்கு செயற்கை கால்- கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தல்…

கோவை: 3 வயது சிறுவனுக்கு செயற்கை கால் பொருத்தி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அசத்தி உள்ளனர்…

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் மூன்று வயதான ரிஸ்வந்த். சிறுவனுக்கு பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை பிரிவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து செயற்கை அவயங்கள் தயாரிக்கும் நிலையத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுவனுக்கு செயற்கை கால் நேர்த்தியான முறைப்படி அளவெடுத்து, செய்யப்பட்டு, பொருத்தப்பட்டது.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த செயற்கை மூட்டுத் தொகுப்பின் கீழ் இதுவரை பயனடைந்தவர்களில் ரிஷ்வந்த் இளைய பயனாளி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Recent News