கோவை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மூத்த குடிமக்கள் வாக்களிப்பதற்கு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டமன்ற பொது தேர்தலையொட்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய வசதிகளை உறுதி செய்வதற்கான குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சட்டமன்ற பொதுதேர்தலை-2026யொட்டி வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய வசதிகளை உறுதி செய்வதற்கான குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, தேர்தல் (வட்டாட்சியர்) தணிக்கைவேல், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த்ராம்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், தன்னார்வு அமைப்பை சார்ந்தவர்கள் உட்பட குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் , சட்டமன்ற பொதுதேர்தலின் போது, மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம்வீடு தேடிச்சென்று ஓட்டுப்பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படுவதை குறித்தும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், தடையின்றி ஓட்டுப்பதிவு செய்ய தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதை குறித்தும் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான, சாய்தளம், குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து வசதிகள் குறித்தும்ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் சக்கரநாற்காலிகள் தயார் நிலையில் இருந்திடும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் NCC NSS நபர்களை நியமனம்ப்செய்யபட வேண்டும் என்றார் ந்
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தகுதியான மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தர இயலாதவர்கள் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கு அவர்களது விவரம் வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்திடுவதற்கு எதுவாக வாக்குச்சாவடி மைய அலுவலர்களை அணுகி தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் அவர்கள் வீட்டில் இருந்து ஓட்டு போடும் போது அவர்கள் மாற்றுத் திறனாளி தான் என உறுதி செய்திடுவதற்கு உரிய ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றார். மேலும், தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் (படிவம்-12 டி) மூலம் வீட்டிலிருந்து வாக்களிப்பதற்கான விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் நாளின் போது இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடுகள் போன்றவைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



