கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு…

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Advertisement

கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த 3 பேரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியையும் ஆண் நண்பரையும் தாக்கி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அச்சம்பத்தில் தொடர்புடைய சதீஷ், அவரது சகோதரர் காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய 3 பேரை சுட்டுப்பிடித்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி அவரது ஆண் நண்பர், உறவினர்கள் விசாரணை அதிகாரிகள் என 113 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து தற்போது இறுதி கட்ட வாதமும் இரு தரப்பிடம் முடிந்து உள்ளது. கைதான சதீஷ்,காளீஸ்வரன்,தவசி ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களது வாதமும் கேட்டறியப்பட்ட நிலையில் மார்ச் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதன்படி இன்று மூன்று பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன. இந்த வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் தீர்ப்பு வழங்க உள்ளார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பள்ளி முடிந்து வீடு திரும்பாத மாணவி- ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த கோவை காவல்துறை…

கோவை: கோவையில் பள்ளி முடிந்து வீடு திரும்பாமல் காணாமல் போன மாணவியை ஒரு மணி நேரத்தில் மீட்ட காவல்துறைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் காணாமல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...