கோவை: ஏடிஎம் அமைத்துத் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
கோவை மாநகரில் ஏடிஎம் அமைத்து தருவதாக 50க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாயை ஈரோடு பள்ளிபாளையத்தை சேர்ந்த தம்பதி துரைசாமி (46) மற்றும் ரம்யா (41) ஆகியோர் மோசடி செய்தனர். அவர்களை கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்த நிலையில் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகர குற்றப்பிரிவில் செட் ஈ பேமண்ட் பிரைவட் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்களிடம் முதலீடு செய்ததற்கு ஆதாரமாக உள்ள ஆவணங்களுடன் கோவை மாநகர குற்றப்பிரிவு 1ல் நேரில் வந்து புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
                                    
