Coimbatore accident: கோவையில் மதுபோதையில் தாறுமாறாகச் சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அவிநாசி சாலையில் நேற்று இரவு 11.30 மணிக்கு விமான நிலையம் நோக்கி கார் வேகமாக சென்றது. அந்த கார் வரதராஜா மில் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது திடீரென்று சென்டர் மீடியம் சுவரில் மோதியது.
அதிவேகமாக சென்று மோதியதால் கார் தூக்கி எறியப்பட்டு இடதுபுறம் சென்று விழுந்தது. அப்போது அந்த வழியாக ரோட்டில் சென்ற 2 பைக்கில் மீது கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்து நடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் காருக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது காரில் வந்த 2 நபர்களும் காயங்களுடன் போராடிக் கொண்டிருந்தனர். சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் அவர்களால் உடனடியாக வெளியில் வர முடியவில்லை.
அதன் பிறகு அந்த 2 வாலிபர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் இரவு நேரத்தில் அவிநாசி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ காட்சிகள்
கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் வந்த 2 வாலிபர்களும் காயமடைந்தனர். அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மதுபோதையில் காரை வேகமாக ஓட்டி சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய் பிரிவு
போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

