ஊதிய உயர்வு வேண்டும்- கோவையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…

கோவை: ஊதிய உயர்வை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Advertisement

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஊதிய உயர்வை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கோவையிலும் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் அச்சங்கத்தினர் ஊதிய உயர்வை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மூன்றாவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவர்களது ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தினர்.

கிளாஸ் 1&2 பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 2023 டிசம்பர் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு தற்போது வரை வழங்கப்படாமல் இருந்து வரும் நிலையில் உடனடியாக அரசு தங்கள் கோரிக்கையை ஏற்று அதனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Advertisement

இந்தப் போராட்டத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கோவை மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் சம்மேளன மாநில துணைச் செயலாளர் கந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...