கோவை: அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஜாதி அடையாளத்துடன் பெயர் வைக்கப்படுவது குறித்த கேள்விக்கு அமைச்சர் எவ.வேலு பதில் அளித்துள்ளார்.
கோவை அவினாசி சாலை மேம்பாலம் இன்று திறக்கப்படும் நிலையில், இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு பெயர் வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதனிடையே, பொதுமக்களின் கருத்துகளின் அடிப்படையில், “ஜாதி அடையாளம் வேண்டாம்” வேண்டாம் என்ற தலைப்பில் நியூஸ் க்ளவுட்ஸ் செய்தித்தளம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் செய்தி வெளியிட்டது.
நேற்று வெளியிடப்பட்ட செய்தி

பலரும் இந்த செய்தியை பகிர்ந்து வந்த நிலையில், இது நேற்று சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது.
இதனிடையே இன்று முதலமைச்சரை வரவேற்கும் கோவை விமான நிலையம் சென்ற அமைச்சர் எ.வ.வேலுவிடம், நமது செய்தியைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பொதுவாக ஜி.டி.நாயுடு என்றே அவரை அழைப்பார்கள்.

அவருடையது 100 ஆண்டுகளையும் கடந்த காலகட்டம். அவர் பெயரே அப்படித்தான் சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் தான் முதலமைச்சர் அப்படி பெயரை வைத்தார். இது முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு. ஜி.டி. நாயுடு குடும்பத்தினரோடு கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.





