கோவையில் உணவு பாதுகாப்பு சட்டங்களை பேக்கரியாளர்கள் பின்பற்ற வேண்டும்- உணவு பாதுகாப்பு அலுவலர் வலியுறுத்தல்

கோவை: உணவு பாதுகாப்பு சட்டங்களை முறையாக பேக்கரி உரிமையாளர் பின்பற்ற வேண்டும், என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்க கூட்டரங்கில், உணவு பாதுகாப்பு சட்டம், மற்றும் விதிமுறைகள் குறித்தான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமையில் நடைபெற்றது.

இதில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேக்கரி உணவு பொருட்கள் தயாரித்தல், விநியோகித்தல், கழிவுகளை அப்புறபடுத்துதல், உணவு பாதுகாப்பு சட்டம் 2006 ல் உள்ள விதிகள் மற்றும் அதனை பின்பற்றுதல் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். அதே போல பேக்கரி உரிமையாளர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

இது குறித்து பேட்டியளித்த மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா கோவை மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கத்தில், சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு அதில் 2006 உணவு பாதுகாப்பு சட்டம் குறித்தும், விதி முறைகள் குறித்த விழிப்புணர்வு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு தரமான உணவுகள் வழங்க நோக்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது என்றார்.

குறிப்பாக பேக்கரி உரிமையாளர் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஊழியர்களுக்கான முறையான பயிற்சிகள், உணவு பொருட்கள் உள்ள இடங்களை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், கழிவுகளை எவ்வாறு முறையாக அகற்ற வேண்டும் போன்ற விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

அதே போல இனி வரும் காலங்களில், பேக்கரி உணவுகள் தொடர்பாக மக்கள் குறைகள் இருந்தால் புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடிகள் உள்ளது.

தினமும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வழக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் அன்மையில் கோவாயில் உள்ள 37 குடோன்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம். அதில் 278 கிலோ காலாவதியான பேரிட்சை பழங்களை அகற்றினோம் என கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார். கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா,...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.