கோவை: தொடர் கனமழை காரணமாக வெள்ளியங்கிரி மலை செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் தற்போது பாதயாத்திரை சென்று வருகின்றனர். இதனிடையே மழைப்பொழிவு காரணமாக வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை வனக்கோட்டம் போலாம்பட்டி வனச்சரகம் போலாம்பட்டி பிளாக் ll காப்புக்காடு வெள்ளிங்கிரி மலையில்( கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளதால்) கனமழை பெய்வதால் பக்தர்களுக்கு பாதுகாப்பு கருதி வெள்ளிங்கிரி மலையேற தற்காலிகமாக மூடப்படுகிறது.
மேலும் மலை ஏறிக் கொண்டுள்ள அனைவரும் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது அனைவரும் இறங்கி கொண்டுள்ளனர். வேறு யாரும் மலையற வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.