சாலையைக் கடக்கும் போது கவனம்; கோவையில் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

கோவை: கோவையில் சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதிய விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் பத்மாவதி (48). இவர் சம்பவத்தன்று அவினாசி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சாலையைக் கடக்க முயன்றார்.

Advertisement

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த நபர் எதிர்பாராத விதமாக பத்மாவதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.

இந்த விபத்தில் சாலையில் சரிந்து விழுந்த பத்மாவதிக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாகச் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற நபர் குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையைக் கடக்கும் போது பைக் மோதி பத்மாவதி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Recent News