தயாராக இருங்கள்… கோவை, நீலகிரி உட்பட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு!

கோவை: மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, நீலகிரி உட்பட 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 13, 14 மற்றும் 15ம் தேதிகளில் மிக கனமழைக்கு (ஆரஞ்சு அலெர்ட்) வாய்ப்புள்ளதாகவும், அதே நாட்களில், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு (மஞ்சள் அலெர்ட்) வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே மேற்கூறிய 7 மாவட்ட ஆட்சியர்களுக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை முக்கிய உத்தரவுகளை பீறப்பித்துள்ளது.

அதில், மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் பேரிடர் கால நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், மழையை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்,

7 மாவட்டங்களிலும் பேரிடர் மீட்புப் பொருட்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொள்ள வேண்டும், எதிர்பாராத விதமாக பேரிட ஏற்பட்டால் உடனே மாநில பேரிடர் மேலாண்மைத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு தற்போது பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் ஜூன் 13,14 மற்றும் 15ம் தேதிகளில் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் திமுக பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை…

கோவை: கோவையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த பரிசு பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சியினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும்...

Video

கோவையில் ஒருவரை தாக்குவதற்கு துரத்திய காட்டுயானை- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை ஒருவரை தாக்குவதற்காக விரட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றைக் காட்டுயானை அட்டகாசம் அதிகமாக...